சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 2019- 2020ம்  ஆண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு விருதுகள் அறிவித்துள்ளது. இதில் கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் M.ஆனந்தகுமார் அவர்களை சிறந்த நாட்டுநலப்பணி திட்ட அலுவலராக தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த விருதை இவர் காவிரியாறு தூய்மைப் பணி,  கிராமப்புற மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி, கணினி பயிற்சி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, பாரம்பரிய கலைகளை மீட்டெடுத்தல், இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் நீர் மேலாண்மை போன்ற அரிய செயல்களில் ஈடுபட்டமைக்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விருது வழங்கி கெளரவித்துள்ளது.

மேலும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர் விருதுகளை  P.பாலமுரளி மற்றும் M.சூர்யா ஆகிய இருவருக்கும்  வழங்கி கௌரவித்துள்ளது. தங்களது தனி திறமைகளால் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும்,  தேசிய அளவிலான முகாம்களில் பங்கு பெற்று சிறப்பித்தமைக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கான பாராட்டு விழா கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் நிறுவனர் R.திருநாவுக்கரசு, தலைவர் T.செந்தில்குமார், ஆலோசகர் S.கோதண்டபாணி, முதல்வர் முனைவர் T.பாலமுருகன், துணை முதல்வர் முனைவர் கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் முனைவர் M.ருக்மாங்கதன் மற்றும் பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

3
0
0
0
0
0