தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமடைந்ததால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்களின் நலன் கருதி, அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மே மாதம் முதற்கட்டமாக 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இதையடுத்து 14 வகை பொருட்களுடன் கூடிய மளிகை தொகுப்புடன், இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் இன்று முதல் வழங்கப்படுகிறது. 

இந்நிலையில் கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் தலைமை கொறடா கோ.வி.செழியன், திமுக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் S.கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் க.அன்பழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் R.அசோக்குமார், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார் ஆகியோர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் க.அன்பழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் R.அசோக்குமார்  ஆகியோர் அன்ணலக்ரஹாரம், கொற்கை, சேஷம்பாடி, கீழப்பழையாறை, உடையாளூர், தேனாம்படுகை, சோழன்மாளிகை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று இந்நிகழ்வை துவக்கி வைத்தனர்.

அனைத்து பகுதியிலும் பொதுமக்கள் சிரமம் இன்றி நிவாரண பொருட்கள் பெற்றுச்செல்ல அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி சமூக இடைவெளியை கடைபிடித்து அட்டைதாரர்கள் பொருட்களை பெற்று சென்றனர்.
7
0
1
0
0
0