செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தமுமுக மற்றும் மமக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதால், தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தாலும், இந்த ஊரடங்கு நேரத்தில் சாமானிய மக்கள் யாரும் வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் தமுமுக மற்றும் மமகவினர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

AJ அகது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக சென்னை தாம்பரம் தமுமுக மாநில துணை பொதுச்செயலாளர் யாகூப் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் முக்கிய நிர்வாகிகளான மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாகிர் உசேன், மாவட்ட செயலாளர் முகம்மது நயினார் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.
2
0
0
0
0
0