கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையிலும் பொதுமக்கள் இ-பதிவு செய்து விட்டு அங்கேயும் இங்கேயும் அலைகின்றனர் இதனைக் கட்டுப்படுத்த, பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்காமல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முறையைக் கையாண்டனர் . இதற்காக குரோம்பேட்டை போலீசார் சாலைகளில் வரும் வாகன ஓட்டிகளிடம் கொரோனா குறித்து ஒலிபெருக்கி மூலம் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆணையர் டாக்டர் பிரபாகர் ஆலோசனையின் பேரில் குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் முருகன் அவர்களின் தலைமையில் இன்று ஜி எஸ் டி சாலை. சந்திரன் நகர்  சங்கம் கூட்ரோடு போன்ற இடங்களில் நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு பாடல்கள் பாடியும், விழிப்புணர்வு வாசகங்களை எடுத்து கூறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்த்து பொதுமக்கள் பாராட்டினார்கள். அப்போது அந்த வழியாக தேவையில்லாமல் சாலைகளில் சுற்றுபவர்களை பிடித்து போலீசார், இதே முறையில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.
0
0
0
0
0
0