கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பயன் பெறும் வகையில் 10 ஆக்சிஜனை கருவிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் திட்டக்குடி அரசு தலைமை மருத்துவர் செல்வேந்திரனிடம் வழங்கினார். 

அப்போது அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும்  நிச்சயம் உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். முடியாத பட்சத்தில் மட்டுமே மேல் சிகிச்சைக்காக அனுப்ப வேண்டும் என தெரிவித்ததுடன், அரசு மருத்துவமனையில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் கொரோனா சிகிச்சை மையத்தில் நடைபெறும் பணியினை பார்வையிட்டார். 

கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ரமேஷ்பாபு, துணை இயக்குனர் செந்தில்குமார், திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, சமூக நல பாதுகாப்பு வட்டாச்சியர் ரவிச்சந்திரன், திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், திட்டக்குடி நகர இளைஞரணி அமைப்பாளர் சேதுராமன், தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் கண் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், சுரேஷ், வழக்கறிஞர் பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் வளையாபதி, பாபு சரவணன், ஆசிரியர் கொளஞ்சிநாதன், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி பொறுப்பாளர் விக்னேஷ், நகர பொறுப்பாளர் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
4
0
0
0
0
0