அண்ணா பல்கலைக்கழக மண்டலம் 15-ல் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் பூப்பந்து போட்டியினை கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் நடத்தியது. இந்த போட்டியில் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லுரி முதல்வர் பரிசினை வழங்கி பாராட்டினார். மேலும் பரிசு பெற்ற மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனரையும் கல்லூரியின் தலைவர், முதல்வர், புலத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
