கும்பகோணம்: அரசு பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பில், கடந்த 14.10.2026 அன்று தில்லையம்பூர் முதியோர் இல்லத்திற்கு சென்ற மாணவர்கள், அங்கு வசிக்கும் முதியோர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உடைகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர்.

தொடர்ந்து, முதியோர்களை மகிழ்விக்கும் வகையில் கலாச்சார நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். மாணவர்களின் அன்பும் அரவணைப்பும் நிறைந்த இந்த நிகழ்ச்சி, முதியோர்களுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான முனைவர் சதீஷ்குமார், முனைவர் பார்த்தசாரதி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.
