பட்டுக்கோட்டை: தேனிசைத் தென்றல் தேவா மறைவையொட்டி பட்டுக்கோட்டையில் இன்று
இசைக்கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவரது திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவர் இசையமைத்த பாடல்களுக்கு பேண்ட், வாத்தியம் மூலம் இசைத்து இசைக்கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர்
திரையுலகில் தேனிசை தென்றல் என்று பட்டம் பெற்ற இசையமைப்பாளர் தேவா (76) திடீரென மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் இசையமைப்பாளர் தேவாவின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அந்தோணியார் கோயில் தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேனிசைத் தென்றல் தேவாவின் திருவுருவப்படத்திற்கு இன்று இசைக்கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தேனிசை தென்றல் தேவாவிற்கு அவர் இசையமைத்த ஒத்தையடி பாதையிலே, வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா,சலோமியா சலோமியா உள்ளிட்ட பாடல்களை இசைக்கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேண்ட், வாத்தியம் மூலம் இசைத்து இசையாலே அஞ்சலி செலுத்தினர்.
