பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித்தடங்களைச் சீரமைத்து மழைநீர் தடையின்றிச் செல்வதை உறுதி செய்யும் வகையில், கடந்த 30 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் இருந்த மோரி வாய்க்காலைத் தூர்வாரும் பணியை அமைச்சர் ர.வினோத் தொடங்கி வைத்தார்.



மோரி வாய்க்காலைத் தூர்வார வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள், ஏற்கெனவே நேரில் சென்று வாய்க்காலின் நிலைமையை ஆய்வு செய்தார். மேலும், பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக வாய்க்காலை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.



அதன் தொடர்ச்சியாக, மோரி வாய்க்காலைத் தூர்வாரும் பணிகளை அமைச்சர் ர.வினோத் அவர்கள் தொடங்கி வைத்தார். நீண்டகாலமாகத் தூர்வாரப்படாமல் இருந்த வாய்க்காலைச் சீரமைக்கும் பணி தொடங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பணிகள் மூலம் மழைக்காலத்தில் நீர்வழித்தடங்களில் ஏற்படக்கூடிய அடைப்புகளைத் தவிர்த்து, மழைநீர் சீராகச் செல்வதற்கு வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



மோரி வாய்க்கால் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் தங்கள் தெருவில் நிலவி வரும் பாதாளச் சாக்கடைப் பிரச்சினையையும் அமைச்சர் ர.வினோத் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.



பொதுமக்கள் தெரிவித்த பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர், இப்பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மோரி வாய்க்கால் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்ததுடன், பொதுமக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் நேரில் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ள அமைச்சர் ர. வினோத் அவர்களின் இந்த நடவடிக்கை, அப்பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முயற்சியாக அமைந்துள்ளது.
0
0
0
0
0
0