தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சோழன்மாளிகையில் சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டு ஒருவர் மரணமடைந்தார். இதனால் இந்த பகுதியில் சுகாதார துறையின் மூலம் சிறப்பு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. பரிசோதனை முகாம் மருத்துவ அதிகாரி நவீனா, சுகாதார ஆய்வாளர் ஆமோஸ், சோழன்மாளிகை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகுமார் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாமில் 119 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டது.

இதனால் இந்த பகுதி முழுவதும் கிருமி நாசிமி தெளிக்கும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. மேலும் சோழன்மாளிகையில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகுமாரின் ஏற்பாட்டில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில்  நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனையும், கொரோனா பரிசோதனையும், நூறு பேருக்கு வேக்ஸின் தடுப்பூசியும் போடப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு முகாமை கும்பகோணம் ஊரக வளர்ச்சித்துறை, உதவி செயற்பொறியாளர் மோஜன்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சோழன்மாளிகை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகுமார், கிராம நிர்வாக அலுவலர் சிராஜுதீன்,  மருத்துவ அதிகாரி நவீனா, கிராம உதவியாளர் மணி ஆகியோர் உடனிருந்தார்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிமாறன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வேலாயுதம், ராமராஜ், பாபு மற்றும் தன்னார்வலர்கள் குமார், சரவணன், அசோக், திராவிடச்செல்வன், குணசேகர், பிரபு, ரோஹித், சரண், கீர்த்திவாசன், சரவணன், துர்க்கா, கோமதி, நந்தினி ஆகியோர் உடனிருந்தனர்.

12
3
2
0
0
0