கைலாசா தலைவர் நித்தியானந்தா புதுச்சேரிக்கு வர உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரது சீடர்கள் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியை சந்தித்து பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளனர்.

புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள கைலாச வித்யாலயா பீடத்தின் கும்பாபிஷேக விழா விரைவில் நடைபெற உள்ளது. இதில் நித்தியானந்தா பங்கேற்க உள்ளதாக கூறப்படும் நிலையில், மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்று அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சீடர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கைலாசா மற்றும் புதுச்சேரி அரசுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவது குறித்தும், ஆன்மீக மற்றும் சமூக நலப் பணிகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் சந்திப்பின்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் சீடர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், கைலாசாவின் ஆன்மீகப் பணிகள் தொடர்பான புத்தகமும் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நித்தியானந்தா புதுச்சேரிக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

0
0
0
0
0
0