கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
கொளத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதனால் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரி மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கொளத்தூர் தேர்தல் முடிவு தொடர்பான இந்த தீர்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
