நடிகை ராஷ்மிகா மந்தனா, ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தில் அப்பாவி பெண்ணான அனு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது ‘மைசா’ படத்தில் பழங்குடியினப் பெண் மற்றும் கிளர்ச்சியாளர் கதாபாத்திரத்தில் முற்றிலும் மாறுபட்ட அவதாரத்தில் நடித்துள்ளார்.
ரவீந்திர புல்லே இயக்கும் இந்த பான்-இந்தியா திரைப்படம் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராஷ்மிகா கையில் ஈட்டியுடன் இடம்பெற்றுள்ள அதிரடி போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ராஷ்மிகா தோன்ற உள்ளதாக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் தாரக் பொன்னப்பாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையே, விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள ‘ரணபலி’ திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் 42 நாட்கள் இடைவெளியில் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளன.
ராஷ்மிகாவின் வித்தியாசமான கதாபாத்திரத்தை காண ரசிகர்கள் மத்தியில் தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
