அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா கடிதத்தை நிறுத்தி வைக்கக் கோரி சபாநாயகரிடம் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி சபாநாயகரிடம் மனு அளித்ததாகவும், தன்னை மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளதாகவும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக எம்.பி. இன்பதுரை, இந்த மனு தொடர்பாக நீதிமன்ற விசாரணையின்போது தலைமை நீதிபதி அமர்வு ஏற்க மறுப்பதாக தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மேலும், விஜய் அரசின் “அரசியல் தூண்டுதல்” மற்றும் “குதிரை பேரம்” குறித்த அதிமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு இசக்கி சுப்பையாவின் புதிய மனு மேலும் வலு சேர்ப்பதாக இன்பதுரை தெரிவித்துள்ளார்.
இசக்கி சுப்பையாவின் இந்த திடீர் நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
