சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்ந்துள்ளது.
மாதத்தின் முதல் நாளில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைப்பது வழக்கம். அதன்படி, செப்டம்பர் 1 முதல் சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டர் ரூ.2,916.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. தொடர்ந்து ரூ.957.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், வணிக சிலிண்டர் விலை உயர்வு ஓட்டல் மற்றும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாதத்தின் முதல் நாளே வணிகர்களுக்கு விலை உயர்வு ஷாக்! ????????
