இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான அமலா ஷாஜி, தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கேரளாவைச் சேர்ந்த அமலா ஷாஜிக்கு இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், விக்ரம் பிரபு நடிக்கும் அவரது 26-வது படத்தின் மூலம் சினிமாவில் தனது பயணத்தை தொடங்குகிறார்.

புதுமுக இயக்குநர் சித்தார்த் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கும் நிலையில், அமலா ஷாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தனது சினிமா அறிமுகம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அமலா ஷாஜி, “ஒரு காலத்தில் நான் கனவு கண்டது இன்று நிஜமாகிறது. என்னுடைய முதல் படம். வாழ்நாள் முழுமைக்குமான சந்தோஷம்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கும், தன்னை ஊக்குவித்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டா திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு… அமலா ஷாஜியின் புதிய பயணம் தொடக்கம்! ????✨
0
0
0
0
0
0