டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்காக முதல்வர் விஜய் சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில், போதிய மழையின்மை மற்றும் காவிரி நீர் வரத்து குறைவு காரணமாக இந்த ஆண்டு தாமதமாக செப்டம்பர் 1ஆம் தேதி அணை திறக்கப்படுகிறது.

முதல்வர் விஜய் தனி விமானம் மூலம் சேலம் சென்று, அங்கிருந்து கார் மூலம் மேட்டூர் செல்கிறார். அவரது வருகையை முன்னிட்டு மேட்டூர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1 ஐஜி மற்றும் 4 டிஐஜிக்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர் அணை பகுதியில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் தீவிர சோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும் பேனர்கள், வளைவுகள் மற்றும் போஸ்டர்கள் அமைத்து வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.56 அடியாகவும், நீர் இருப்பு 54.45 டி.எம்.சி.யாகவும் உள்ளது. டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக ஏற்கனவே 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பாசனத்திற்கான நீரை முதல்வர் விஜய் சற்று நேரத்தில் திறந்து வைக்க உள்ளார்.

தாமதமானாலும்... டெல்டாவுக்கு தண்ணீர் திறப்பு! ????????
0
0
0
0
0
0