நடிகர் நானியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ள ‘Yeshanagula’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நானி நடிப்பில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தை ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்குகிறார். இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்க, மோகன் பாபு, ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் ‘Yeshanagula’ பாடலில் நானியுடன் கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாடியுள்ளார். காசர்லா ஷியாம் பாடலை எழுதியுள்ள நிலையில், ஜானகி ரெட்டி மற்றும் பிரபா பாடியுள்ளனர்.
பாடல் வெளியான 2 மணி நேரத்திலேயே 1.6 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பாடலுக்கு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ????
முன்னதாக ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கிய ‘தசரா’ திரைப்படத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
‘தி பாரடைஸ்’ செப்டம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ????????
