தஞ்சாவூர்: IPAA சார்பில் நடைபெற்ற தஞ்சாவூர் Divisional Level இறகுப்பந்து (Badminton – Shuttlecock) போட்டியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.
தஞ்சாவூரில் உள்ள சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 25.08.2026 அன்று நடைபெற்ற இப்போட்டியில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் இடத்தையும், மாணவிகள் நான்காம் இடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. மேலும், மாணவர்களை சிறப்பாகப் பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குநர் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களின் இந்த வெற்றி விளையாட்டுத் துறையில் தொடர்ந்து கல்லூரி சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு அரசு இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர், அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
