கடலூர், அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில் இணைக்கும் பாலமாக உள்ளது இந்த திட்டக்குடி வெள்ளாட்டு மேம்பாலம். இந்த மேம்பாலம் கடந்த 2014ம் ஆண்டு திறக்கப்பட்டது இந்த பாலத்தின் இருபுறமும் 24 சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன அந்த சோலார் மின் விளக்குகளில் சுமார் 20 க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பாலம் முழுவதும் இருண்டு கிடக்கிறது. இந்த பாலத்தின் வழியாக பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் தினமும் அன்றாட தேவைகளுக்கு திட்டக்குடி வந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் இந்தப் பாலத்தை இரவு நேரங்களில் குழந்தைகளுடன் கடக்கும் பெண்கள் செல்போன் வெளிச்சத்தில் தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதையடுத்து திட்டக்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசனிடம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த மேம்பாலத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த அமைச்சர், மேம்பாலத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் 48 மணி நேரத்தில் எரிய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் உள்ள மின் விளக்குகள் எரியாமல் இருந்தால் உடனடி சரி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். 

இந்நிகழ்வில் திட்டக்குடி தாசில்தார் தமிழ்ச்செல்வி, காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், திட்டக்குடி செயல் அலுவலர் மத்தியாஸ், மண்டல துணை தாசில்தார் சிவராமன், கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் குமார் ஆகியோரும், திமுக சார்பில் மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு, தொகுதி பொறுப்பாளர் கண் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், சுரேஷ், ஆசிரியர் கொளஞ்சிநாதன், வார்டு செயலாளர் இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்..
1
0
0
0
0
0