சென்னை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் இன்று தனது 16-வது திருமண நாளை கொண்டாடி வருகிறார்.

சின்னத்திரையில் தொகுப்பாளராகப் பயணத்தைத் தொடங்கிய சிவகார்த்திகேயன், பின்னர் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகி, தனது நகைச்சுவை, நடிப்பு மற்றும் தனித்துவமான திரை பாணியால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

16-வது திருமண நாள்

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதி இன்று தங்களது 16-வது திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

திருமண நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் பலரும் இந்தத் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திரையுலகில் பிஸியாக பயணித்து வரும் சிவகார்த்திகேயனுக்கு, அவரது குடும்ப வாழ்க்கையிலும் ஆர்த்தியின் துணை முக்கியமானதாக இருந்து வருகிறது. இவர்களது குடும்ப புகைப்படங்கள் மற்றும் சிறப்பு தருணங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

16 ஆண்டுகளை நிறைவு செய்து 17-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு ரசிகர்கள் தங்களது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
0
0
0
0
0
0