கும்பகோணம்: இயற்கையை பாதுகாக்கவும், உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், கும்பகோணம் – காரைக்கால் பைபாஸ் அருகே மரம் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் இராம நிரஞ்சன் தலைமையில், வனத்துறை சார்பில் வனக்காப்பாளர் பாலமுருகன், திருநீலக்குடி காவல் நிலையம் சார்பில் முதல் நிலைக் காவலர் (Grade-I) லக்ஷ்மணன், சிட்டி யூனியன் வங்கி ஆடுதுறை கிளை சார்பில் மேலாளர் பூமிநாதன், நன்னிலம் கிளை காசாளர் ஹரி சுந்தர் ஆகியோருடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.

வனத்துறையின் மூலம் மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்று, பொதுமக்களும் இளைஞர்களும் தங்கள் பகுதிகளில் மரங்களை நட்டு வளர்க்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு ஊரிலும் மரம் நடுவதை இயக்கமாக மாற்றி, பசுமையான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு செய்தியும் இந்நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஊர் சார்பில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தனர். மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரியாதை செய்து இனிப்புகள் வழங்கப்பட்டன.
அனைவரும் “ஒரு மரம் நடுவோம்… இயற்கையை காப்போம்! பசுமையான பாரதத்தை உருவாக்குவோம்!”

இந்நிகழ்ச்சி தஞ்சை மண்டல தலைவர் ரமேஷ் குமார், தஞ்சை மாவட்ட பொதுச் செயலாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோரின் ஏற்பாட்டில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
-
தன்னை மட்டும் விளம்பரம் படுத்திக் கொள்ளும் மனிதன்
