திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலையில் உள்ள, மகாசக்தி மாரியம்மன், மற்றும் ஊத்தாடி கருப்பண்ண சுவாமி கோவில், 25-ம் ஆண்டு ஆடி அமாவாசை மற்றும், ஆடி பூர திருவிழாவின் ஒரு பகுதியான விளக்கு பூஜை மிக விமர்சையாக நடந்தது.
இக்கோவில் அப்பகுதி மக்களின் வழிபாட்டு தெய்வமாக விளங்குகிறது. ஆடி மாதம் அந்த கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பூர திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதுபோல இந்த வருடம் 25 ஆவது ஆண்டாக ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பூரத் திருவிழா, கடந்த 4ம் தேதி கணபதி ஹோமம், பூச்சொரிதல், விழாவுன் தொடங்கியது. 7ம் தேதி ஊஞ்சல் சேவையும், 8ம் தேதியான நேற்று திருவிளக்கு பூஜையும் நடந்தது.
இந்த விழாவில் துவாக்குடி வடக்கு மலை அதன் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 11ம் தேதி முலைப்பாரியும், 12ம் தேதி அன்னதானமும், 13ஆம் தேதி அம்மன் வீதி உலாவும் 14ஆம் தேதி வளைகாப்பு விழாவும் நடைபெறுகிறது.
