திரிஷாவிற்கு அரசு அங்கீகாரத்துடன் முதல் சங்கம்'-வைரலாகும் போஸ்டர்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் திரிஷா கிருஷ்ணன். 2002-இல் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் முன்னணி நடிகையாக அறிமுகமான திரிஷா ‘சாமி’, ‘கில்லி’, ‘ஆறு’, தொடங்கி தக் லைஃப், லீயோ என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா. கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசியலிலும் பேசு பொருளாகவும் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் தான் சமீப காலமாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் சமூகப் பணிகளிலும் தீவிரமாகக் கலந்துகொண்டு வருகிறார். இதனால் அவருக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறதா? அல்லது அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், மதுரையில் முதல் முறையாக ‘திரிஷா நற்பணி மன்றம்’ தொடங்கப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் சார்பில் ரசிகர் மன்றத்தினர் மதுரை மாநகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி, திரிஷாவை அரசியலுக்கு வரவேற்கும் விதத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.

சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. “தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷாவிற்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்” என்ற வாசகத்தோடும், எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை என்றும், மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும், அந்தச் சுவரொட்டிகளில் வீரமங்கை வேலுநாச்சியாரின் உருவப்படமும் திரிஷாவின் படமும் ஒன்றாக இடம்பெற்றுள்ளன.
மதுரை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்தில் இவ்வாறு திரிஷாவுக்கு அரசியல் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது, தற்போது தமிழக அரசியலில் புயலை கிளப்பியிருக்கிறது.
-
வீரமங்கைவேலுநாச்சியார் சுதந்திர போரட்டதியாகிதெரியுமா
-
வீரமங்கைவேலுநாச்சியார் சுதந்திர போரட்டதியாகிதெரியுமா
-
வீரமங்கைவேலுநாச்சியார் சுதந்திர போரட்டதியாகிதெரியுமா
.jpeg)