இது வெறும் பழக்கம் இல்ல. அறிவியல் +ஆன்மீகம் + மரியாதை 3-ம் சேர்ந்ததுதான்.
கோவில் என்பது இறைவன் வீடு. அங்கே போகும்போது நம்முடைய அகந்தை, பதவி, பணம் எல்லாத்தையும் வெளிய விட்டுட்டு போகணும்.
சட்டை அந்தஸ்தின் அடையாளம். அத கழட்டிட்டு போனா "நான் ஒரு சாதாரண பக்தன்" என்ற பணிவு வருது.வெறும் கால் = "இது புனித பூமி" என்று மண்ணை மதிக்கிறோம்.
கோவில்களின் தரை கருங்கல், செம்பு தகடுகளால் ஆனது. அது பூமியின் காந்த சக்தியை கடத்தும். வெறும் காலில் நடக்கும்போது அந்த நேர்மறை ஆற்றல் நம் உடம்புக்குள் நேரா போகுது. செருப்பு போட்டா அந்த தொடர்பு தடைபடும்.
கோவில்களின் கருவறையில் விக்கிரகத்தின் கீழே "தாமிர தகடு" இருக்கும். அங்கிருந்து வரும் ஆற்றல், மந்திர ஒலிகள் நேரா நம் மார்பு, முதுகு வழியா உடம்புல ஏறணும். சட்டை இடையில வந்தா ஆற்றல் குறையும். அதனால தான் ஆண்கள் மேல்சட்டை அணியாமல் போகனும்னு சொல்றாங்க
வெளியில போட்டு வர சட்டை, செருப்புல தூசி, அழுக்கு இருக்கும். கோவில் தூய்மையான இடம். அதனால வெளி அழுக்க கோவிலுக்குள்ள கொண்டு போக கூடாதுன்றதுக்காக தான்.
அரசர்கள் கூட கோவிலுக்கு போகும்போது வேட்டி, அங்கவஸ்திரம் மட்டும் தான். இது ஒரு கட்டுபாடு.
அதே மாதிரி பெண்கள் புடவை / சுடிதார் அணிவது, தலையில் துணி போடுவது - இதெல்லாம் மரியாதைக்காக.
பெரும்பாலான தமிழ்நாட்டு கோவில்களில், குறிப்பா சிவன் கோவிலில் ஆண்களை மேல்சட்டை கழட்ட சொல்றாங்க. பனியன் போடலாம். ஆனால் பெண்கள் ஆடை கழட்ட தேவையில்லை. ஆனா ஆடை ஒழுக்கமா, தலை மூடி இருக்கணும். அனைவரும் செருப்பு, பெல்ட், லெதர் பொருட்கள் வெளிய விட்டுடணும்.
வெளி அழுக்க விட்டுட்டு, அகந்தைய கழட்டிட்டு, இறை ஆற்றல வாங்க போற இடம் தான் கோவில். அதனால தான் சட்டை இல்லாம, செருப்பு இல்லாம போகிறோம்.
