சென்னை:* நீண்ட நாள் எதிர்பார்புக்கு பிறகு 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று ஜூலை 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இயக்குனர் H. வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படம் வெறும் சினிமா மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்கப்படுகிறது.
அரசு பள்ளி ஆசிரியராக இருக்கும் "அர்ஜுன்" என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். கல்வி, மருத்துவம், ஊழல் நிறைந்த அமைப்பால் சாமானிய மக்கள் படும் துயரங்களை கண்டு கொதிக்கும் அவர், அரசியலில் நேரடியாக குதித்து "மக்களுக்கான ஜனநாயகத்தை" மீட்டெடுக்க போராடும் கதை.
"ஓட்டு போடுவது மட்டும் ஜனநாயகம் இல்லை, கேள்வி கேட்பதுதான்" என்ற விஜய்யின் வசனம் டிரைலரிலேயே வைரலானது.
நாயகன்:
விஜய் - இரட்டை வேடத்தில் ஆசிரியர் + அரசியல் தலைவர்
நாயகி:
பூஜா ஹெக்டே - சமூக செயற்பாட்டாளர் வேடம்
வில்லன்:
பாலிவுட் நடிகர் பாபி தியோல் - ஊழல் அமைச்சராக அதிரடி
துணை நடிகர்கள்:
கௌதம் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த்
இசை:
அனிருத். "சிக்கம் சிக்கம்", "ஜனநாயகன் Anthem" பாடல்கள் ஏற்கனவே சாதனை படைத்துள்ளன.
ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்
தயாரிப்பு:
KVN Productions - ₹300 கோடி பட்ஜெட்
தமிழ்நாட்டில் மட்டும் ₹52 கோடி. இது விஜய் படத்தின் அதிகபட்ச முன்பதிவு.
உலகளாவிய வெளியீடு: 5000+ திரைகள். அமெரிக்காவில் 450 திரைகள். FDFS சென்னை, மதுரை, கோவையில் காலை 4 மணி காட்சிகள் அனைத்தும் Housefull. சமூக வலைதளம்: 24 மணி நேரமாக X-ல் No.1 டிரெண்டிங்.
விஜய் தனது "தமிழக வெற்றி கழகம்" கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்த பிறகு வெளிவரும் முதல் படம் இதுவாகும். படத்தின் தலைப்பே "ஜனநாயகன்" என்பதால், படத்தில் வரும் வசனங்கள், காட்சிகள் அனைத்தும் அவரது அரசியல் கொள்கையின் நீட்சியாக பார்கப்படுகிறது.
திரைத்துறை விமர்சகர்கள் கூறுகையில், "இது ஒரு ஆக்ஷன் படம் மட்டுமல்ல. விஜய் தனது அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்கும் மிகப்பெரிய பிரச்சார படமாகவும் இது பார்க்கப்படுகிறது" என்கின்றனர்.
இன்று அதிகாலை முதலே தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னை சத்யம் திரையரங்கில் 50 அடி கட்அவுட் மதுரையில் பால் அபிஷேகம், அன்னதானம் கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
படத்தின் முதல் நாள் வசூல் ₹200 கோடியை தாண்டும் என்று வர்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், "ஜனநாயகன்" 2026-ன் மிகப்பெரிய வசூல் சாதனை படமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
2.jpeg)