தூத்துக்குடி: முதல்வர் விஜய்க்கு எதிராக அவதூறு பேசிய வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திக்குளம் திமுக MLA G.V. மார்கண்டேயன் தொடர்பாக அவரது மகன் குறித்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் சர்சையை கிளப்பியுள்ளது.

கைது செய்யப்பட்ட போது மார்கண்டேயனின் வீட்டில் நடந்த வாக்குவாதத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் போலீசார் அவரை அழைத்து செல்லும் போது, அங்கிருந்த ஒருவர் *"உங்க பையன் தான் உங்க கூட இல்லையே சார்.. நீங்க ஏன் இப்படி பேசுனீங்க"* என கேள்வி எழுப்புவது போல் உள்ளது.

இந்த வீடியோவை வைத்து எதிர்கட்சியினர், "மகனுக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா" என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் "மகன் வெளிநாட்டில் இருக்கும் போது மற்றவர்கள் பிள்ளைகளை போராட அனுப்புவதா" எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது குறித்து திமுக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. மார்கண்டேயனின் மகன் தற்போது வெளிநாட்டில் படித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அவதூறு பேச்சு வழக்கில் சிக்கியுள்ள நிலையில், இந்த புதிய வீடியோவும் சர்சையை அதிகப்படுத்தியுள்ளது.

பின்னணி: கடந்த ஜூலை 18 கோவில்பட்டி கூட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக தவெக நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் ஜூலை 20 அன்று மார்கண்டேயன் கைது செய்யப்பட்டார்.
0
0
0
0
0
0