கும்பகோணம்: அரசு இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் இயங்கிவரும் அரசு சமூக வானொலி 90.4 சார்பாக 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த டெல்டா பகுதி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது  வழங்கும் விழா 17 ஜூலை 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் டெல்டா பகுதியை சுற்றி அமைந்துள்ள ஸ்டார் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளி, புனித அந்தோனியார் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளி, கே.ஜி.எஸ் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ஸ்ரீ மாதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கோகிலாம்பாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, மினர்வா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி,  அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி,  நகர மேல்நிலைப்பள்ளி, மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி போன்ற பல்வேறு பள்ளிகளில் பயின்று பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.  

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் செயலர் முனைவர் இரா. செல்வநாயகம் அவர்கள் கலந்துகொண்டு  கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றி மாணவ மாணவியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

அரசு இன்ஜினியரிங் கல்லூரியின் தலைவர்  செந்தில்குமார், இயக்குநர் அரவிந்த் மற்றும் கல்லூரி முதல்வரும் அரசு சமூக வானொலியின் இயக்குநருமாகிய முனைவர் பாலமுருகன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தலைமையேற்று சிறப்பித்தனர். 

நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய அரசு சமூக வானொலி ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயராகவன், அரசு சமூக வானொலி தொடங்கியதன் நோக்கங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்தார். 

மேலும் கல்விப்புலத்  தலைவர் முனைவர் ருக்மாங்கதன்,  அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் கண்ணன், துணை முதல்வர் சுதாகர்,  தமிழ்ப்பேராய அமைப்பின் முன்னாள் மாணவர் சரவணன்  மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு விருது பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டினார்கள். 

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு சமூக வானொலி உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
0
0
0
0
0
0