தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி உடைந்துள்ள நிலையில், வரும் 20ஆம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை பாஜக மீண்டும் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“தொகுதி மறுவரையறை; கடந்த முறைபோல் திமுக தற்போதும் எதிர்க்க வேண்டும்” – கார்த்தி சிதம்பரம் எம்.பி.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளித்தால், அது தனது மனசாட்சிக்குச் செய்யும் துரோகமாக அமையும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரமும், தங்கள் நிலைப்பாட்டை திமுக மாற்றக்கூடாது என எம்.பி. கார்த்தி சிதம்பரமும் வலியுறுத்தியுள்ளனர்.

தொகுதி மறுவரையறை; கடந்த முறைபோல் திமுக தற்போதும் எதிர்க்க வேண்டும்” – கார்த்தி சிதம்பரம் எம்.பி.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது. இதில், கடந்த கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு தோல்வி அடைந்த தொகுதி மறுவரையறை மசோதாவை பாஜக மீண்டும் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், இதற்கு திமுக ஆதரவளித்தால், அது தனது மனசாட்சிக்குச் செய்யும் துரோகமாக அமையும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரமும், தங்கள் நிலைப்பாட்டை திமுக மாற்றக்கூடாது என எம்.பி. கார்த்தி சிதம்பரமும் வலியுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “த.வெ.க அரசு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் புதியவர்கள், பட்ஜெட் தாக்கலுக்கு பின்னரே அவர்கள் குறித்து விமர்சிக்க முடியும். த.வெ.க அரசு குதிரை பேரம் பேசவேண்டிய தேவை இல்லை. அவர்களிடம் இருக்க கூடிய எம்.எல்.ஏக்களை கொண்டு 5 வருட ஆட்சியை தொடர்வார்கள்.

காவல் நிலைய மரணம் என்பது எல்லா ஆட்சியிலும் தொடர்கிறது. இந்த ஆட்சியை மட்டும் குறை சொல்ல கூடாது. அடக்குமுறைக்காகவே உருவாக்கப்பட்டது காவல்துறை, இதுபோன்ற மரணங்களை குறைக்க அவர்களது மன நிலையில் மாற்றம் வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் த.வெ.கவினர் மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. அதனால் அதனை குறை சொல்ல தேவையில்லை. மாணவர்கள் ஆயுத தாக்குதல் என்பதற்கு அரசை குற்றம்சாட்ட முடியாது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடையே மாற்றம் வேண்டும். தொகுதி மறுவரையறையில் கடந்த முறை திமுக எப்படி எதிர்த்ததோ? அதேபோல் இந்த முறையும் எதிர்க்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 14ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், “ஏப்ரல் 2026-ல் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தோல்வியடைந்த 131-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை மீண்டும் கொண்டுவர பாஜக திட்டமிட்டு வருகிறது. திரிணாமுலைப் பிளவுபடுத்திய பிறகு, தோல்வியடைந்த அந்த மசோதாவின் புதிய வடிவத்திற்கு ஆதரவளிக்கத் தேவையான முக்கிய வாக்குகளைப் பெற, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளை பாஜக தன் பக்கம் இழுக்க முயல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோல்வியடைந்த அந்த மசோதாவின் உண்மையான நோக்கம் குறித்து சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தெளிவான புரிதலைக் கொண்டுள்ளன. எதிர்காலத்திலும் அவை தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதி மறுவரையறையை உண்மையான நோக்கமாகக் கொண்ட அந்த மசோதாவின் புதிய வடிவத்திற்கு ஆதரவளிப்பது, ஏப்ரல் 2026-ல் அவர்களை வழிநடத்திய அவர்களின் மனசாட்சிக்குச் செய்யும் துரோகமாக அமையும். தன்னியச்சையாகச் செயல்படும் பாஜகவிடமிருந்து மாநிலங்களின் உரிமைகள் தீவிரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
0
0
0
0
0
0