ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதல்வர் விஜய் உத்தரவு. தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவினை வலுவான நிறுவனமாக மாற்ற அறிவுறுத்தல்.

தனியாருக்கு இணையாக ஆவின் நிறுவனத்தை உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், ஆவின் நிறுவனம் மூலம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பால் கொள்முதலைப் பல மடங்கு அதிகரிக்க அறிவுறுத்தினார். ஆவின் பால் விநியோகச் சங்கிலியை மேலும் விரிவுபடுத்தி, தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவினை ஒரு வலுவான மற்றும் முன்னணி நிறுவனமாக மாற்றியமைக்கவும் உத்தரவிட்டார்.

மேலும், பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து அரசு சார்பில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதே போல், மீன்வளத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டங்களில் அமைச்சர்கள் மரிய வில்சன், ஸ்ரீநாத், விஜயலட்சுமி, கமலி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
0
0
0
0
0
0