கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களின் புதுமை திறன் மற்றும் சமூக பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் வாகன திருட்டை தடுக்கும் ஓர் புதிய கண்டுபிடிப்பு அறிமுக விழா கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அரசு கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார் தலைவர். டி.சி.செந்தில்குமார் மற்றும் இயக்குனர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் அழகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் உருவாக்கிய வாகன திருட்டை தடுக்கும் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தி பாராட்டினர். இந்த கண்டுபிடிப்பு வாகன திருட்டை தடுக்கவும் வாகன பாதுகாப்பை மேம்படுத்தவும் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கல்லூரியின் இயந்திரவியல் துறையின் உதவி பேராசிரியர் முனைவர் துரைமுருகன் வழிகாட்டுதலின்படி இயந்திரவியல் துறையின் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஜி.சுவாமிநாதன் கே.யாழினி ஏ.விஜய குரு பிரசாத் மற்றும் கே.கணேஷ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் முனைவர் பாலமுருகன், கல்வி புலத்தலைவர் தியாகராஜன், இயந்திரவியல் துறைத் தலைவர் சதீஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.
இந்நிகழ்வில் தேசிய கல்லூரி நிறுவனத்தினர் மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவித்து சமூகத்திற்கு பயனளிக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி தொடர்ந்து முன்னோடியாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர். இந்த புதிய கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் பாதுகாப்பு துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
