திருச்செந்தூரில் இதுவீ த லீடர்ஸ் அமைப்பின் 2வது மாநில மாநாடு வரும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்று அந்த இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாஜகவின் முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை அந்த கட்சியிலிருந்து விலகி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘வி த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.

இந்த இயக்கத்துக்கான உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாஜகவிலிருந்து விலகி, அண்ணாமலையின் இது நம்ம இயக்கத்தில் பலர் சேர்ந்து வருகின்றனர்.

18 மாதங்கள் வரை தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு அரசியல் பயிற்சி அளிக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார். அதன் பின்னர் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக ஏற்கெனவே அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

முதலில் அமைப்பாக தொடங்கி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வி த லீடர்ஸ் என்ற இயக்கத்தின் 2வது மாநில மாநாடு திருச்செந்தூரில் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

0
0
0
0
0
0