கோவளத்தில் தவெக கூட்டணி ஆலோசனையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், "தவெக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர இருக்கிறது” எனப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவரும், முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய் தலைமையில், தவெக தோழமைக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று கோவளத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், “தவெக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர இருக்கிறது” எனப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவளத்தில் இன்று நடந்த தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், விசிக, காங்கிரஸ், ஐ.யு.எம்.எல். ஆகியவை பங்கேற்றன. இதில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், தவெக தோழமைக் கட்சிகளின் செயல்பாடுகளை சரியாக ஒருங்கிணைக்க ஒரு ஒருங்கிணைப்புக் குழு உருவாக்க வேண்டும் எனவும், குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்க வேண்டும் எனவும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தவெக தலைமையில் அமைந்துள்ள இந்தக் கூட்டணிக்கு தன்னிடம் ஒரு பெயர் இருப்பதாகவும், அதனை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல கட்சிகள் கூட்டணிக்கு வர இருக்கிறது எனத் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
-
அருமை வாழ்த்துக்கள் காவல் துறை நண்பர்களுக்கு....IJK தஞ்சை வடக்கு மாவட்டம்.....
