சென்னை: தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவை சேர்ந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா சுப்பிரமணியன் உள்பட 400க்கும் அதிகமானவர்கள் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் சர்ச்சையில் சிக்கி உள்ளார். சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் பார்க்கும்போது அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வீடியோ வெளியானது.

இந்நிலையில் தான் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் நேற்று திமுகவினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

போலீசார் தடையை மீறி சென்னை புரசைவாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். அதேபோல் சென்னை சைதாப்பேட்டையில் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தான் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர்கள் சேகர் பாபு, மா சுப்பிரமணியன் உள்பட 400க்கும் அதிகமான திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
0
0
0
0
0
0