மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 சதய விழாவின் இரண்டாம் நாளான இன்று தமிழக அரசு சார்பில் தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட மாலையை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ராஜராஜ சோழன் சிலைக்கு அணிவித்து மரியாதை செய்தார். மேலும் இராஜ வீதிகளில் திருமுறைகள் வீதி உலா நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்கத்தினர் அரசியல் கட்சியினர் இன்று முழுவதும் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.
4
0
1
0
0
0