நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூரில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ தேவ துர்க்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜையின் போது நடைபெற்ற மகா யாகத்தில் அக்னி ரூபமாக சரஸ்வதி தேவி தோன்றிய இவ்வாலயத்தில் நவராத்திரி பெருவிழா பூச்சொரிதலுடன் வெகு விமர்சையாக துவங்கியது.

முன்னதாக தேவூர் ஶ்ரீ தேவபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பெண்கள் பூத்தட்டுகளை சுமந்து ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர். அம்மனுக்கு மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி விஜயேந்திரன் சுவாமிகள் செய்திருந்தார்.

நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பால்குட ஊர்வலம் மற்றும் ரதக்காவடி ஊர்வலம் அக்டோபர் 22 தேதியும், மகா சண்டியாகம் எதிர்வரும் அக்டோபர் 23ஆம் தேதியும், ‌ஊஞ்சல் உற்சவம் அக்டோபர் 25ஆம் தேதியும் நடைபெறுகிறது. 
1
0
0
0
0
0