இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் காஸா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் சுதந்திர பாலஸ்தீனத்திற்காக உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று கூறியும் தாய் நாட்டின் விடுதலைக்காக பாலஸ்தீனர்கள் போராடுவதற்கு உரிமை உள்ளது என்று கூறி எஸ்டிபிஐ கட்சி சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட தலைவர் முஹம்மது ரஃபீக் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்று போருக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
0
0
0
0
0
0