நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், மண்டல அளவிலான கையுந்து பந்து போட்டி, கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்று விளையாடியதை பார்வையாளர்கள் வெகுவாக கண்டு ரசித்து கை தட்டி உற்சாகப்படுத்தினர். 

இப்போட்டியில் நாகை இ.ஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி அணியினர் முதலிடத்தையும் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி அணியினர் இரண்டாம் இடத்தை பிடித்தனர். இதே போல மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்த அணியினருக்கும் பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இதில் முதலிடம் பிடித்த அணி மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
0
0
0
0
0
0