கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய அளவு தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தியும், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரைக் கூட தடுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் பாசன மாவட்டங்களான திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவடங்களில் முழு நேர கடை அடைப்பு போராட்டத்திற்கு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. இதற்கு நாகை மாவட்டத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்பட திமுக கூட்டணி கட்சிகளும், பல்வேறு விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்து கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா தலங்களான உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் சாலை ஓர கடைகளில் உணவு சாப்பிட்டு வருகின்றனர் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் வேளாங்கண்ணி பேராலயம் நாகூர் தர்கா போராட்டம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.
0
0
0
0
0
0