தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இடியுடன் 17ஆம் வரை கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், கடலாக்குடி, தேவூர், வெண்மணி, இலுப்பூர் கிள்ளுக்குடி, வலிவலம், திருக்குவளை, உள்ளிட்ட இடங்களில் மின்னல், இடியுடன் கனமழை பெய்தது இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது மேலும் பல சிரமங்களுக்குப் பிறகு குறுவை சாகுபடி செய்து தற்போது குறுவை அறுவடைப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த மழையினால் அறுவடை பாதிக்கக்கூடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் சம்பா விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.