உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் இன்று நாகப்பட்டினத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில் விவசாயிகளுக்கு ஆதரவாக நாகப்பட்டினம் பகுதியில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் நாகப்பட்டினம் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தண்ணீர் வழங்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், அதைப் பெற்றுத் தராத மத்திய அரசை கண்டித்தும் இதில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தபால் நிலையம் உள்ளே நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.