மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்  ஒன்றியம் கோனேரிராஜபுரம் ஊராட்சியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூபாய் 9.5 லட்சம் மதிப்பீட்டில் 100 kV மின் திறன் கொண்ட மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன் கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் ஏ.ஆர்.ராஜா, முருகமணி, இமயநாதன், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், மின்வாரிய அலுவலர்கள் பணியாளர்கள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0
0
0
0
0
0