குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம், படுகாயமடைந்தோருக்கு 1 லட்சம், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 35 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.