தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சார்ந்த கார்த்தி வித்யாலயா பள்ளியின் தாளாளர் மகளான 7 ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி பி.கே.அகஸ்தி தன் சிறுவயதிலேயே அனிமேஷன் படத்தை உருவாக்கியிருக்கிறார். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த படத்தின் கதையை தன்னுடைய தந்தையிடம் கூற, அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் உடனே தானே முன் வந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார் இயக்குனர் பி.கே.அகஸ்தியின் தந்தை, டாக்டர்.எஸ்.ஏ கார்த்திகேயன்.
இப்படத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றை கொண்டு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும், வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி படித்து முன்னேற வேண்டும், எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற விஷயங்களை ரொம்ப இயல்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லி இருக்கிறார் பி.கே.அகஸ்தி.
இது குறித்து இயக்குனர் பி.கே.அகஸ்தி பேசுகையில்:
எந்த ஒரு நல்ல கருத்தையும் மாணவ பருவத்திலேயே அறிவுறுத்தினால் பிற்காலத்தில் அவர்களின் வாழ்வியல் முறை சிறப்பாக அமையும் என்றார்.
இத்திரைப்படம் அக்டோபர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கதை இயக்கம் – பி.கே.அகஸ்தி, திரைக்கதை வசனம், பாடல்கள் – அரங்கன் சின்னத்தம்பி, இசை - எம்.எஸ்.அமர்கித், தயாரிப்பு - டாக்டர். எஸ்.ஏ.கார்த்திக்கேயன், எடிட்டிங் – பி.எஸ்.வாசு
-
வாழ்த்துக்கள் ஒட்டக்கூத்தர் ஜீவசமாதி தாராசுரம்
-
அருமை
-
Congratulations pappa
-
வாழ்த்துக்கள்
-
வாழ்த்துக்கள்