நாகை மாவட்டம் ஆழியூரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் ரமேஷ் வயது 29. வடகரை நியாய விலைகடையில் பணியாற்றி வருகிறார். சிக்கல் கீழவீதியைச் சேர்ந்த தினகரன் என்பவரது மகள் கல்லூரி மாணவி பிரபாவதி இருவரும் நாகையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

பாப்பாக்கோவில் அருகே சென்றபோது எதிரே திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை நோக்கி வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மின்னல் வேகத்தில் மோதியது. இதில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற அரசு ஊழியர் ரமேஷின் இடது கால் துண்டானது, இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி பிரபாவதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து நாகை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அருகே கோர விபத்தில் அரசு ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர்: சீனிவாசன் 

0
0
0
0
0
0