நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து சக்தி பாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க ஹரி கிருஷ்ணன், சூர்யா, கண்ணன், சிரஞ்சீவி, சக்தி பாலன் உள்ளிட்ட 5 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது 2 அதிவேக படகில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையான ஆயுதங்களால் மீனவர்களை தாக்கி, 550 கிலோ வலை, 50, ஆயிரம் மதிப்பிலான பிடித்து வைக்கப்பட்ட மீன்கள் வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி உள்ளீட்டுகளை கொள்ளையடித்துச் சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வேதாரண்யம் அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த நான்கு மீனவர்கள் தாக்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்த நிலையில் மீண்டும் செருதூர் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது படுகாயம் அடைந்த 5 மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். விடுத்துள்ளனர்.