தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரி அன்னை கல்வி குழுமத்தில் அன்னை கலைச்சிறகுகளின் 22 வது ஆண்டு விழா நடைபெற்றது. அன்னை கல்விக் குழும தாளாளர் M.I.அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஜே. லொயோலா பீரிஸ்  வரவேற்புரை ஆற்றினார்.பாரத பிரதமர் அலுவலக அறிவியல் துறை ஆலோசகரும் பேராசிரியருமான முனைவர் ஆர்.செந்தில்குமார் மற்றும் திரைப்பட நடிகையும், விஜய் தொலைக்காட்சி புகழ் திருமதி. தீபா சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் மற்றும் வாழ்த்துக்கள் வழங்கினர்.அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சீ.பொ.மாணிக்கவாசுகி, அன்னை கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சண்முகநாதன், அன்னை பாத்திமா கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் முத்துசாமி, அன்னை பல் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சபாநாயகம், அன்னை செவிலியர் கல்லூரி முதல்வர் சுமதி, அன்னை பாமெடிக்கல் அறிவியல் மற்றும் பிஸியோதெரபி, பி.ஓ.டி கல்லூரி முதல்வர் எட்வின் ராஜ்குமார், அன்னை யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர்.கனேஷ், அன்னை சித்தா மருத்துவ கல்லுரி முதல்வர் டாக்டர்.கார்த்திகேயன் ஆகியோர் 22 ம் ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தனர். அன்னை கல்வியியல் கல்லுரி உதவி பேராசிரியர் முனைவர் பி.கவிதா நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் அன்னை குழுமத்தின் 5000 த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் அன்னை கல்வி குழுமத்தின் தலைவர் முனைவர் M. அன்வர்கபீர் அன்னை கல்வி குழுமத்தின் துணை தலைவர் டாக்டர். யாக்ய நேம், முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர் ஆர்.ராஜ்குமார், இயக்குனர் கே.ரவி, கல்வி குழும மக்கள் தொடர்பு அலுவலர் எஸ் பாலாஜி, வணிக மேலாண்மை துறை இயக்குனர் முனைவர் சி.சுரேஷ், கணிணி அறிவியல் துறை இயக்குனர் முனைவர் கே.சுஜித், அன்னை மருத்துவமனை இயக்குனர், அன்னை கல்விக் குழும திட்டம் மற்றும் விரிவாக்க துறை அலுவலர்கள் முனைவர் எஸ்.ஆனந்த், முனைவர் ப.மணி சுரேஷ், அருளானந்தம், கல்விக் குழுமத்தின் நிர்வாக அலுவலர்கள் துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பேருந்து ஓட்டுனர்கள், கல்லூரி காவலர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

2
1
0
0
0
0