சென்னை: தங்கம் விலை (Gold Price) கடந்த 8 நாட்களாக குறைந்து வந்தது. திடீரென நேற்று தங்கம் விலை அதிகரித்து நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 அதிகரித்தது. இதனால் இன்றும் நேற்றைப் போலவே ஷாக் கொடுக்குமா அல்லது விலை குறைந்து இன்ப அதிர்ச்சி தருமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தங்கம் விலை கடந்த ஒரு ஆண்டில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அதாவது ஜனவரி 1, 2025 அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த ஒரே ஆண்டில் இந்த விலை ஒரு லட்சத்தை தாண்டியது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம் தொட்டு நகை பிரியர்கள், ஏழை எளியோருக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது இந்த தங்கம் விலை.
ஏறி இறங்கும் தங்கம் விலை
இதற்கு பிறகாவது குறையும் என்று பார்த்தால் மேலும் தங்கம் விலை உயர்ந்தது. அடுத்த இரு மாதங்களில் மேலும் ரூ.20 ஆயிரம் உயர்ந்து தங்கம் விலை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது. தினம் தினம் உயரும் தங்கம் விலையை பார்த்து நகை பிரியர்கள் மற்றும் சாமானியர்கள் கவலையடைந்து வருகிறார்கள். கடந்த இரு மாதங்களாக மட்டுமே தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
கடந்த மாதம் 4 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000 என்ற அளவில் இருந்தது. அதன்பிறகும் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது. கடந்த 30 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,17,040-க்கு விற்பனை ஆனது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. அதாவது கடந்த 8 நாட்களில் மட்டும் ரூ.4,440 குறைந்து இருந்தது.
இன்றைய ரேட் என்ன?
இந்த நிலையில் நேற்று திடீர் திருப்பமாக தங்கம் விலை அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்தது. சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,13,600 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.130 அதிகரித்து ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இன்று விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தங்கம் விலையை போல வெள்ளி விலையும் குறைந்து வந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றும் வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.270க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
Sir., I am V.வல்லவன்.. திறமை sir soooopper. Sir
