கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் 
இயந்திரவியல் துறை மற்றும் தேசிய மாணவர் படையினரால் (8 தமிழ்நாடு பட்டாலியன், கும்பகோணம்) ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்வில் முதல்வர் முனைவர் பாலமுருகன், துணை முதல்வர் முனைவர் கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் முனைவர் ருக்மாங்கதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இன்ஜினியரிங் காலேஜ் மற்றும் பாலிடெக்னிக் காலேஜ், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 



தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர்கள் கல்லூரி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்தனர். இவ்விழாவினை என்சிசி கேர் டேக்கர் ஆபிஸர் பேராசிரியர் ஜோசப் ஆரோக்கியம் மற்றும் இயந்திரவியல் துறை பேராசிரியர் சதீஷ்குமார் ஏற்பாடு செய்திருந்தனர்.
0
0
0
0
0
0