மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு கடைவீதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79 வது பிறந்தநாள் விழா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொண்டாடப்பட்டது. 

மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத் அகமது தலைமையில் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட தலைவருமான பண்ணை சொக்கலிங்கம் கலந்து கொண்டு திருவாலங்காடு கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத் அகமது மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
1
1
0
0
0
0